என் மலர்
நீங்கள் தேடியது "ஆவடி மாநகராட்சி"
- பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளரிடம் முறையிடலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
- ஆவடி மாநராட்சி சுமார் 181.82 சதுர கிமீ. பரப்பளவில் அமையும்.
ஆவடி:
ஆவடி மாநகராட்சியின் எல்லை 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த நிலையில் ஆவடி மாநகராட்சியின் எல்லையை வரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி ஆவடி மாநகராட்சியுடன் பூந்தமல்லி. திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய 3 நகராட்சிகள் இணைகின்றன.
இதேபோல் கருணாகரச்சேரி. நடுக்குத்தகை, நெமிலிச்சேரி, மோரை, பாலவீடு, வெள்ளானூர். அயப்பாக்கம், காட்டுப்பாக்கம், கண்ணப்பாளையம், சோராஞ்சேரி, பாணவேடுதோட்டம், சென்னீர்குப்பம். நசரத்பேட்டை, பாரிவாக்கம், வரதராஜபுரம், அகரமேல், மேப்பூர் ஆகிய 17 கிராம ஊராட்சிகளும் சேருகின்றன.
இதையடுத்து 3 நகராட்சிகள் மற்றும் 17 ஊராட்சிகளை இணைத்த பிறகு ஆவடி மாநராட்சி சுமார் 181.82 சதுர கிமீ. பரப்பளவில் அமையும்.
இதில் பூந்ததவல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சிகள், சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. பூந்தமல்லியில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை வருகிற 2026-ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது. மற்றும் 100 வருட பழமையான அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவேற்காட்டில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ள பாரம்பரிய நகரமாகும்.
திருநின்றவூர் நகராட்சியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் கோவில் மற்றும் பூந்தமல்லி, திருநின்றவூர். மோரை, வெள்ளலூர் பகுதிகளை இணைக்கும் வெளிவட்டச் சாலை(வண்டலூர் முதல் மாதவரம் வரை) அமைந்துள்ளது. இந்த 20 உள்ளாட்சி அமைப்புகளையும் ஆவடி மாநகராட்சியுடன் இணைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நகராட்சிகள், ஊராட்சிகளை மாநராட்சியுடன் இணைப்பது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளரிடம் முறையிடலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
- சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
- ஆவடி மாநகராட்சி இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்த்து இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சி 250 வார்டாக விரைவில் உயரும். இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில் 155 வார்டுகளுடன் 10 மண்டலமாக செயல்பட்டது. நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை கொண்டு வரும் நோக்கில் 2011-ம் ஆண்டு சென்னை புறநகரில் இருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகைள இணைத்து 424 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்படி 200 வார்டுகள், 15 மண்டலங்களாக தற்போது மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சென்னை புறநகரில் உள்ள மேலும் 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் வகுத்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், சோழிங்க நல்லூர் சட்டசபை தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள் என 50 ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னையுடன் இணைய உள்ள ஊராட்சிகள் விவரம் வருமாறு:-
திருப்போரூர் தொகுதியில் உள்ள நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மேடவாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், ஒட்டியம்பாக்கம், ஆலந்தூர் தொகுதியில் உள்ள மூவரசம்பட்டு, அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பரணிப் புத்தூர், மவுலிவாக்கம், தரப்பாக்கம், கோவூர், பெரிய பணிச்சேரி, இரண்டாம் கட்டளை, தண்டலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மலையம்பாக்கம், கொல்லச்சேரி, கொழுமுனி வாக்கம்.
மதுரவாயல் தொகுதியில் உள்ள வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செந்நீர்குப்பம், நசரத்பேட்டை, பேம்பூர், அகரம் மேல், வரதராஜபுரம், பாரிவாக்கம்,
மாதவரம், அன்னம்பேடு, வெள்ளானூர், மோரை, வடகரை, கிராண்ட்லைன், புள்ளி லைன், தீர்த்தகிரையம் பட்டு, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், பொன்னேரி தொகுதியில் உள்ள விச்சூர், வெள்ளிவாயல் சாவடி, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். இதனால் 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. சட்ட சபை தொகுதி அடிப்படையில் மண்டலங்களையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின பரப்பளவ ஆகியவை முடிவு செய்யபடும். இதுபற்றி அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதன்பிறகுதான் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும். அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
சென்னை மாநகராட்சி விரிவடையும் போது வரி வருவாய் பெருகும். மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். உலக வங்கி நிதி உதவியும் அதிகம் பெற முடியும்.
இதனால் தரமான சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள், பூங்காக்கள், பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வர முடியும். எனவே அடுத்த மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக இதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு விடும்.
சென்னையை போன்று தாம்பரம் மாநகராட்சியில் திரிசூலம், பொழிச்சலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் அடுத்த தேர்தலுக்கு முன்பாக இணைக்கப்பட்டு விடும். இதே போல் ஆவடி மாநகராட்சி இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
- ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.
- ஆவடி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை:
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.
கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முடிவடையாமலேயே உள்ளன.
இதற்கிடையே ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ள உலக வங்கியிடம் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளன. விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 182.55 லட்சம் குடிநீர் திட்டப்பணிக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.269 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காக சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.
ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தரணிதரன் கூறும்போது, அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பொதுமக்கள் ஏற்கனவே டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர். அந்த தொகைக்கு வட்டி தர வேண்டும், அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பட்டாபிராமை சேர்ந்த ஜெயக்குமார் கூறும்போது, குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு நான்தான் முதலில் பணம் கட்டினேன். அதற்கான பலனை நான் இன்னும் பெறவில்லை. இந்த பணத்தை வங்கியில் கட்டியிருந்தால் வட்டியாவது கிடைத்திருக்கும் என்றார். இந்த கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் பலர் ஆவடி நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் குக்கிராமங்களில் வாழ்வது போன்று வாழ்கிறோம் என்று குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் கூறும்போது, ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து சலுகை அளிக்க முடியுமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
ஆவடி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.