என் மலர்
நீங்கள் தேடியது "அகஸ்தியர் அருவி"
- ஒட்டி வனத்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட இணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்துள்ளார்.
நெல்லை:
பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவின் போது ஏராளமான பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு முன்பே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி வனத்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவில் பராமரிப்பு பணி சம்பந்தமாகவும், வனப்பகுதிகளில் வன விலங்கு பாதுகாப்பு மற்றும் மனித, வன விலங்கு மோதலை தடுக்கும் விதமாகவும், சரணாலயம் சுத்தம் செய்யும் பணிக்காக பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி வருகிற 13, 14-ந்தேதிகளில் மூடப்படுகிறது. இதற்காக வருகிற 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 9 நாட்கள் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட இணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கள ஆய்வின்போது கோவில் அருகில் செல்லும் மின்பாதையை பாதுகாப்பான இடைவெளியுடன் சற்று உயர்த்துவதற்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவுப்படி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி ஆகியோர் ஆலோசனையின் பேரில் இளநிலை பொறியாளர் விஜயராஜ் தலைமையில் பணியாளர்களால் உடனடியாக மின்வயர்கள் உயர்த்தப்பட்டது.