என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்காள தேச அணி"
- வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையவில்லை
- அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. வங்காளதேசம் முதல் போட்டியில் நாளை இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான லிட்டன் தாஸ் ஆசிய கோப்பைக்கான தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ், இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. மேலும், இலங்கைக்கு எதிராக நாளை மோத இருக்கும் போட்டிக்காக இலங்கை செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என வங்காளதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
அனாமுல் ஹக் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1254 ரன்கள் அடித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். கடந்த 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடியது அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.
- கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
- ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-
இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்