என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரூர்"

    • பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம்.
    • மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

    மேலும், பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.

    இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    அதன்படி, பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மெட்ரோ ரெயில் 35- 40 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    • சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார்.
    • ராமர் சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.

    சென்னை போரூரில் குரு பகவானுக்கு என்று ஒரு ஆலயம் உள்ளது. இத்தலத்து மூலவர் பெயர் ஸ்ரீராமநாதஸ்வரர்.

    இத்தலத்தின் வரலாறு வருமாறு:-

    சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் சிரசில் தன் கால்பட்டு தோசம் பெற்றதையும் உணர்ந்து, ஒரு மண்டலம் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளிவந்தார். ராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.

    ராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் 'எனப் பெயர் வந்தது.

    ராமருக்கு குருவாக விளங்கியதால் இங்குள்ள சிவன், குரு அம்சமாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பு. எனவே இத்தலம் குரு-தட்சிணா மூர்த்தி தலமாக விளங்குகிறது. தட்சிணா மூர்த்திக்கு செய்ய வேண்டிய பரிகார பூஜை அனைத்தும் சிவனுக்கே நடைபெறுகிறது. தலவிருட்சம் 'நெல்லி மரம்' விசேசமான ஒன்றாகும்.

    • இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.
    • நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    திருவொற்றியூரில் பிரதோஷக் காலம் மிகவும் போற்றி வணங்கத்தக்கதாக இருந்ததை திருவொற்றியூர் தலபுராணம் சிறப்பாக பேசுகிறது.

    சிவபெருமான் நஞ்சு உண்ட பின் தேவர் தொழ ஆடியருளிய திருக்கூத்தினை தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.

    நாரத முனிவர், ராமன் மகன் லவனுக்கு திருவொற்றியூரின் பெருமைகளை கூறும்போது இங்கு வந்து படம்பக்க நாதரை பிரதோஷக் காலத்தில் தரிசித்தால் மிகபெரும் பயன்களை அடைவாய் என்று குறிப்பிட்டார்.

    இதையடுத்து அயோத்தியில் இருந்து கிளம்பி லவன் தொண்டை மண்டல நாட்டு திருவொற்றியூர் நோக்கி வந்தான்.

    லவன் பிரதோஷம் வழிபாடு செய்ய திருவொற்றியூர் வரும் வழியில் இடையே பெரும் மழை வந்தது.

    பயணம் தடைப்பட்டது. ஓற்றியூர் இறைவனை பிரதோஷ காலத்தில் தரிசிக்க தடையாக பெருமழை வந்ததே என வருந்தி, தன் உடலை மாய்த்து உயிர் விட லவன் துணிந்தான்.

    அப்போது காளை வாகனத்தில் ரிஷப ரூபாராய் ஓற்றியூரான் லவன் இருந்த இடத்திலேயே தரிசனம் தந்து அருளினார்.

    அந்த இடம் லவன் பேரூர் என பெயர் பெற்றது.

    தற்போது போரூர் என வழங்கப்படுகிறது.

    இங்கு லவனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு கோவிலும் உள்ளது.

    ஓற்றியூர் ஈசன் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்வோர்க்கும் இன்னும் வளங்கள் யாவும் வழங்குகிறார்.

    பிரதோஷ காலத்தில் நந்தியினை வழிபட்டும், ஆலகால விஷம் உண்டு ஆனந்த கூத்தாடிய பெருங் கருணைக்கடல் தியாகராஜாகிய சிவபெருமானை பக்தியுடன் திருவடிபணிந்து வழிபட்டால் எல்லா வளமும், நலமும் தேடி வரும்.

    திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநந்திஸ்வரர் கோவிலுக்கு பிரதோஷ காலத்தில் சென்று வழிபட்டால் சிறந்த பயன்களை பெறலாம்.

    நந்தி மனிதவடிவில் உள்ள இந்த நந்தீஸ்வரர் கோவில் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

    • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
    • வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    சென்னை:

    சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.


    • முடிச்சூரில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.

    சென்னை:

    அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.

    ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பஸ்கள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    மேலும், தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் அந்தப் பகுதியை சேர்ந்த மற்றும் ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த பஸ் நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பஸ்களும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து ஏற்றிச்செல்கிறோம். இந்த பஸ் நிலையம் அந்தப் பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழக தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உணவக ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆன்லைன் மூலம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

    போரூர்:

    போரூர், அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு ஆன்லைன் மூலம் அய்யப்பந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்தார்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த டெலிவரி ஊழியர் கார்த்திகேயனிடம் உணவு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். பார்சலை பிரித்த போது அதில் உள்ள சிக்கனில் இருந்து புழுக்கள் ஒவ்வொன்றாக நெளிந்து வெளியே வந்தது. இதனை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை உடனடியாக வீடியோவாக பதிவு செய்த அவர் உணவகத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறினார்.

    ஆனால் ஊழியர்கள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் கார்த்திகேயனுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உணவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக கார்த்திகேயன் தேசிய உணவு பாதுகாப்புத் துறைக்கு ஆன்லைன் மூலம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×