என் மலர்
நீங்கள் தேடியது "மண்மலை கோவில்"
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- அறநிலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் அடுத்த மண்மலையில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும்.
இங்கு ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலசுப்பிரமணியர் கோவிலின் மேலே செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு வழிநடுவில் தற்காலிக உண்டியல் அமைத்து பக்தர்கள் செல்ல முடியாத அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
இது குறித்து அங்கு மேற்பார்வையில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் இதுகுறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் பக்தர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் படிக்கட்டில் வழியில் உண்டியல் வைத்து தடைகள் ஏற்படுத்துவதை தவிர்க்கவும், அடிப்படை வசதிகளை முழுமையாக செய்திடவும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டி பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.