என் மலர்
நீங்கள் தேடியது "நிர்மலா சீதாராமன்"
- மேக் இன் இந்தியா திட்டம் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
- மேக் இன் இந்தியா திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:
மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடையவில்லை. ஆனால் உற்பத்திக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.
மேக் இன் இந்தியாவில் நம்பிக்கை வையுங்கள், அது நல்ல பலன்களைத் தருகிறது.
இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரம் சில வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறந்தவை.
மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்கள் மீது மோடி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- பெண்கள் பாதிக்கப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
- சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார்.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது" என்றார்.
1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். "அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரானார்" என குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய அவர், "கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், திரவுபதியை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?" என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழியின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதி மந்திரி, சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
- பீகாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் இந்த பட்ஜெட் வரவேற்கப்படும்.
- இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை கவர பா.ஜ.க. முயற்சிக்கிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும், பீகார் மக்களையும் கவருவதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறது. இந்த பட்ஜெட்டானது பீகாரில் ஓட்டுப்போட தகுதியான 7.64 கோடி மக்களால் வரவேற்கப்படும்.
அதைத் தவிர பிற மாநில மக்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. எம்.பி.க்களின் கைத்தட்டல்களுடன் கூடிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் ஆறுதலான வார்த்தைகள் மட்டும்தான்.
கடந்த 2024-25ம் நிதியாண்டில் திருத்தப்பட்ட வருவாய் ரூ.41,240 கோடியும், திருத்தப்பட்ட நிகர வரி வருவாய் ரூ.26,439 கோடியும் குறைந்துள்ளது. அதேபோல, மொத்த செலவினங்களும் ரூ.1.04,025 கோடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மூலதன செலவு ரூ.92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைக் காட்டிலும் சுகாதாரத் துறைக்கு ரூ.1,255 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.11,584 கோடியும், சமூகநலத் திட்டங்களுக்கு ரூ.10,019 கோடியும், வேளாண் துறைக்கு ரூ.10,992 கோடியும், கிராமப்புற மேம்பாடு ரூ.75,133 கோடியும், நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.18,907 கோடியும், வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்கு ரூ.1,894 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையோர் பிரிவினருக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.