என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துஷார் காந்தி"
- ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- துஷாரை காந்தியை வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் "வெள்ளையனே வெளியேறு" எனும் இயக்கம் 1942ல் ஆரம்பிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படும் இந்த போராட்டம், மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டதாகும்.
இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மும்பை கிராந்தி மைதானத்தில் இதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்திற்கெதிராக அமைதி வழியில் போராட மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் 8ம் தேதி இரவு மும்பை காவல்துறை இவர்களின் கொண்டாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தது. அவர் வீட்டு வாசலில் சுமார் 20 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.
தடையை மீறிய துஷார், ஆகஸ்ட் 9 தேதி காலை 07:00 மணியளவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டிலிருந்து புறப்பட்டார். துஷாரை அங்கு நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.
இதனை மீறி துஷார் புறப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி மும்பை சான்டா க்ரூஸ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை அவர் அங்கேயே வைக்கப்பட்டார்.
இது குறித்து துஷார் காந்தி கூறுகையில், 'வெள்ளையர்களால் என் கொள்ளு தாத்தாவும் கொள்ளு பாட்டியும் கைது செய்யப்பட்ட நாளிலேயே என்னை காவலில் வைத்ததற்கு காவல் துறைக்கு நன்றி. இந்தியாவில் இன்றிருக்கும் நிலை அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அடக்குமுறை நாட்களை போன்றே உள்ளது' என்றார்.