என் மலர்
நீங்கள் தேடியது "தனியார் பேருந்துகள்"
- தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்துடன் பஸ்களை இயக்கி வருகிறது
- ஒரு ரெயில் கூட கடந்த 9 ஆண்டுகளில் இயக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி :
குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி இரவு நேர முன்பதிவு வசதி கொண்ட ரெயில் இயக்காத காரணத்தால் தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்துடன் பஸ்களை இயக்கி வருகிறது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இது மட்டுமில்லா மல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் முனைய வசதிகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன. இந்த காரணத் தால் நெல்லை, மதுரை வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும். கேரளா வழியாக சுற்று பாதையில் ரெயில்கள் இயக்குவதை கைவிட வேண்டும்.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு தற்போது சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தில் பகல் நேர வந்தே பாரத் ரெயில் இயக்கப் பட்டால் பயண நேரம் சுமார் 8 முதல் 9 மணி நேரம் வரை ஆகும். பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி யிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 6 மணிக்கு செல்லுமாறு இரவு நேர வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். மறுமார்க்கமாக சென்னையி லிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு காலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருமாறு இயக்க வேண்டும்.
இதனை தெற்கு ரெயில்வே புறக்கணித்தால் குமரி மாவட்ட மக்களை திரட்டி காங்கிரஸ் சார்பில் இரணியல் ரெயில்வே நிலையத்தில் ரெயில் மறியல் நடைபெறும். மேலும் வந்தே பாரத் ரெயில்கள் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருப்பதால் அதிக கட்ட ணத்துடன் இயக்கப்படுகிறது.
மேலும் கன்னியாகுமரியில் இருந்து –வாரணாசி, திருப்பதி, ஹரித்துவார், ரிசிகேஷி, சீரடி, பூரி, அமிர்தசரஸ், துவாரகா ஆகிய ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஒரு ரெயில் கூட கடந்த 9 ஆண்டுகளில் இயக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.