search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைவான் துணை அதிபர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது.
    • தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.

    தைபேசிட்டி:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.

    அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அங்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு சென்றார். அவரது அமெரிக்க பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தைவானின் நீண்ட கால உயிர் வாழ்வை சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும். தைவானுக்கு சர்வாதி காரத்தின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாங்கள் முற்றிலும் அடிபணிய மாட்டோம். பயப்படமாட்டோம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவோம்" என்றார்.

    மேலும் தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தைவான் பாதுகாப்பாக இருக்கும் போது உலகம் பாதுகாப்பாக இருக்கும். தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.

    • பராகுவே நாட்டிற்கு செல்லும் வழியில் அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்
    • இறையாண்மையை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சீனா

    தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தைவான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

    இதுகுறித்து சீனா தரப்பில் கூறும்போது ''தைவான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி. அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    தைவான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது. ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி தைவான் ஒட்டிய கடற்பகுதியில் ராணுவ நடவடிக்கையை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

    இதையும் தாண்டி சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×