search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women’s Rights Project"

    • வருகிற 19, 20-ந்தேதிகளில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
    • வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும், நியாய விலைக் கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக 326 நியாயவிலைக் கடைகளில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முகாம்கள் நடத்தப் பட்டுள்ளது.

    2-ம் கட்டமாக 449 நியாயவிலைக் கடைகளில் கடந்த 5-ந்தேதி முதல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட முகாமில் குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தவறியவர்கள் கடைசி 2 நாட்களில் வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்க ளைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் 15, 16-ந்தேதிகளில் நடைபெறும் விடுபட்ட வர்களுக்கான விண்ணப்பப் பதிவை வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடை பெறும். சிறப்பு முகாம்களில் சேர்த்து நடத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், 2 கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் உள்ள 775 மையங்களிலும் நடை பெற்றுள்ள முகாம்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அவரவர் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு உட்பட்ட மையங்களில் 19,20-ந்தேதிகளில் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். இந்த முகாம்களில் 21 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள், தகுதிவாய்ந்த இதர மகளிரில் ஒருவர் விண்ணப் பத்துடன் சரிபார்ப்பதற்காக ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×