என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருப்புத்துணி கட்டி போராட்டம்"
- ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர்.
- இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுந்தர்ராஜ். துணைத் தலைவராக இருப்பவர் வசந்தி மயில்வேல். ஊராட்சி மன்ற செயலராக இருப்பவர் பால்ராஜ். இந்த ஊராட்சியில் துணைத் தலைவர் உட்பட 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் மீது பல்வேறு முறையீடு புகார்கள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), மாவட்ட கலெக்டர், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யங்கோட்டை ஊராட்சி புதூரில் உள்ள திருமண மண்டபம் அருகே 200 அடி வரை மட்டும் ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 600 அடி வரை ஆழ்துளைக்கிணறு அமைத்ததாக 15-வது நிதி குழு மானியம் நிதி ரூ.6 லட்சம் எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் செல்வ மகாமுனி, சரண்யா, இளங்கோவன், முனிராஜ், பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டியபடி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு கட்டி போராட்டம் நடத்தினர்.
- சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களில் சிலரை பேசவிடாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கையில் ஊராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அனுமதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்