என் மலர்
நீங்கள் தேடியது "படிப்பகங்கள்"
- பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வேண்டுகோள்
- கொல்லங்கோடு பேரூராட்சி படிப்பகம் என்ற வாசகத்துடனேயே திகழ்கிறது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் நகராட்சி சார்பில் படிப்ப கங்கள் உள்ளன. இந்த படிப்பகங்கள், தற்போது நீண்ட காலமாக பூட்டியே கிடக்கின்றன. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், அனைவரும் கல்வி பெற்று வாழ்வில் முன்னேற படிப்பகங்கள் தொடங்கப் பட்டன. ஆனால் கொல்லங்கோடு பகுதியில் இந்த படிப்பகங்கள் பயனற்று கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் இந்த படிப்பகங்கள் தற்போது காட்சி பொருளாக தான் உள்ளது என வேதனை தெரிவித்தனர். கொல்லங்கோடு பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்றளவும் கண்ணனாகம் சந்திப்பில் உள்ள ஒரு படிப்பகம் கொல்லங்கோடு பேரூராட்சி படிப்பகம் என்ற வாசகத்துடனேயே திகழ்கிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றம் செய்வதோடு, கொல்லங் கோடு நகராட்சிக்கு சொந்த மான அனைத்து படிப்பகங்க ளையும் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.