என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய அரசாங்கம்"
- ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது
- அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியது
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, அதானி குழுமம். இதன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி (Gautam Adani).
கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது.
இதனை தொடர்ந்து, செபி (SEBI) எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்த முறைகேடுகள் குறித்த விசாரிக்க தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்திலும் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மார்ச் மாதம், இது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இரு மாதங்கள் கழித்து "குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை" என இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இதை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற ஒரு அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இது குறித்து விசாரணை செய்வதுதான் சரியானது. இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், தனியாக "சிட்" (SIT) எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசும், செபியும்தான் எடுக்க வேண்டும். தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொது வெளியில் வரும் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வதும், அவற்றின் அடிப்படையில் உத்தரவிடுவதும் நீதி பரிபாலனத்திற்கே இழுக்காக அமையும்.
இவ்வாறு அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மொத்தம் உள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து கவுதம் அதானி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் கூறியிருப்பதாவது:
மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை எப்பொதும் நிலைத்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியமே வெல்லும். எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களின் சிறு பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.
இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.
The Hon'ble Supreme Court's judgement shows that:
— Gautam Adani (@gautam_adani) January 3, 2024
Truth has prevailed.
Satyameva Jayate.
I am grateful to those who stood by us.
Our humble contribution to India's growth story will continue.
Jai Hind.
- தக்காளி விலை ஒவ்வொரு நாளாக கடுமையாக உயர்ந்தது
- ஏற்கனவே மெக்டொனால்ட் மற்றும் சப்வே தக்காளியை மெனுவிலிருந்து நீக்கியது
இந்திய மக்களின் உணவு தயாரிப்புகளில் வீடுகளிலும், உணவகங்களிலும் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படுவது தக்காளி. சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான அனைத்து உணவு தயாரிப்புகளிலும் தக்காளி இடம்பெறும்.
சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் தக்காளி விலை ஒவ்வொரு நாளாக கடுமையாக உயர்ந்தது.
கிலோ ஒன்று ரூ.10-லிருந்து ரூ.20-க்குள் விற்று வந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.100 எனும் அளவை தொட்டது. இந்த விலையேற்றம் காரணமாக பல குடும்பங்களில் தக்காளியின் பயன்பாடு குறைக்கப்பட்டது. குடும்ப தலைவிகள் தொலைக்காட்சி பேட்டிகளிலும், சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் இது குறித்து தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்கள் உணவு பண்டங்களின் விலையை ஏற்றும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் விலையேற்றம் விற்பனையை மந்தமாக்கி விடலாம் என்பதால் செய்வதறியாது இருந்தனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் பல கிளைகள் கொண்ட பன்னாட்டு உணவகமான அமெரிக்காவை சேர்ந்த "பர்கர் கிங்" (Burger King), தக்காளியின் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகவும், தரமான தக்காளி கிடைப்பதில் தொடர்ந்து நிலவும் சிக்கல் மற்றும் கட்டுக்கடங்காத விலையேற்றத்தின் காரணமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"தக்காளிக்கும் விடுமுறைக்காலம் தேவைப்படுகிறது" என நகைச்சுவையாக குறிப்பிட்டு இந்நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது:-
ஒப்பற்ற தரமான மற்றும் சுவையான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் உள்ளோம். ஆனால் தற்போது தக்காளியின் வினியோகமும், நாங்கள் எதிர்பார்க்கும் தக்காளியின் தரமும் கேள்விக்குரியதாக இருக்கிறது. இதனால் தற்காலிகமாக தக்காளியை எங்களது உணவு தயாரிப்புகளில் நீக்கியுள்ளோம். ஆனால், மீண்டும் விரைவில் அவை சேர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம். நிலைமையை புரிந்து கொண்டு எங்களோடு ஒத்துழைக்குமாறு வாடிக்கையாளர்களை வேண்டுகிறோம்.
இவ்வாறு பர்கர் கிங் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க பன்னாட்டு உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் (McDonald's) தங்கள் மெனுவில் தக்காளியை நீக்கியது என்பதும் மற்றொரு அமெரிக்க பன்னாட்டு உணவு நிறுவனமான சப்வே (Subway) தங்கள் சாலட் மற்றும் சாண்ட்விச் உட்பட பல தயாரிப்புகளில் தக்காளியை நீக்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தக்காளியின் விலையேற்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளால் பரபரப்பாக்கப்பட்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை நேபாளம் உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வைத்திருக்கிறது.
இருந்தும் தற்போதைய சந்தை நிலவரப்படி தக்காளியின் விலை கிலோ ரூ.60-லிருந்து தொடங்குகிறது.
ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஏஷியா எனும் நிறுவனத்தால் நடத்தப்படும் பர்கர் கிங் உணவகங்களுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 400 கடைகள் உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்