search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீமோகுளோபின்"

    • நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.
    • இரத்த சோகை என்பது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும்.

    இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவையாகும்.

    போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கமாகும்.

    இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. அதே போல, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறையலாம். இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர். நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

    இரத்த சோகை என்பது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் மிகவும் பொதுவான நோயாகும். பல சந்தர்ப்பங்களில், இது லேசானது மற்றும் அறிகுறியற்றது மற்றும் மேலாண்மை தேவையில்லை.

    வயதுக்கு ஏற்ப நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது மற்றும் இனப்பெருக்க வயதுடைய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது மிகவும் பொதுவானது.

    85 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 20%க்கும் அதிகமானோர் இந்த பாதிப்பு உள்ளது. முதியோர் இல்ல மக்கள் தொகையில் இரத்த சோகை பாதிப்பு 50%-60% ஆகும். வயதானவர்களில், ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடு போன்ற இரத்த சோகைக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உள்ளனர். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளில், சிறுநீரக செயலிழப்பு அல்லது நாள்பட்ட அழற்சிக்கான சான்றுகள் உள்ளன.

    வயது மற்றும் பாலினம் தவிர, இனம் இரத்த சோகையின் முக்கிய நிர்ணயம் ஆகும், ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள்தொகையில் பரவல் அதிகரித்து வருகிறது.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    * மயக்கம்

    * உடற்சோர்வு

    * தலைவலி

    * தோல் வெளுத்தல்

    * உடல் வெப்பம் குறைதல்

    * பசியின்மை

    * நெஞ்சுவலி

    * சீரற்ற இதயத்துடிப்பு

    * வாய் மற்றும் நாக்கில் வீக்கம்

    * முச்சுத்திணறல்

    இரத்த சோகை ஏற்பட காரணங்கள்

    * வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு

    * தன்னெதிர்ப்பு நோய்கள் (autoimmune disorders)

    * இரத்தப்போக்கு

    * மருந்து, மாத்திரைகள்


    இரத்த சோகை யாரை பாதிக்கும்?

    * மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள்

    * கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள்

    * வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வோர்

    * குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்

    இரத்த சோகை குணமாக்க சில வழிமுறைகள்

    * இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிடவும்.

    * வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்.

    * தேவைப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

    * இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

    • ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம்.
    • இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும்.

    நம் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான மினரல் இரும்பு சத்து ஆகும். முக்கியமாக ரத்த உற்பத்திக்கு உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான சத்து. இந்த இரும்புச்சத்தை பயன்படுத்தி தான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும்.

    மேலும் தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம் உடல் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களின் குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்படலாம்.

    மற்றவர்ளுடன் ஒப்பிடும் போது பெண்கள், அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், குழந்தைகள், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஹீமோகுளோபின் எனும் புரவிதமானது உடலின் உள் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம். ரத்த சோகை அதாவது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையலாம்.

    இதனால் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, மயக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல அறிகுறிகளை உணரலாம்.

    இரும்புச்சத்து குறைபாட்டின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

    உலர்ந்த அத்திப்பழம்

    இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய காலையில் இரண்டு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து எலும்புகள் மற்றும் செரிமானத்திற்கு நன்மை தருகின்றன.

    பேரிச்சம்பழம்

    ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிச்சம்பழங்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. சிறந்த பலன்களை பெற காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பேரிச்சம் பழங்களை சாப்பிடவும்.

    உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு

    உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. பாதாமில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பாதாம் மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

    சாலியா விதைகள்

    இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. சாலியா விதைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.

    ×