search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி"

    • இளம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிகளில் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு, உயிரி தொழில்நுட்ப வியல், வேதியியல், சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறைகள் இணைந்து தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி 4 நாட்கள் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் முனைவர். குருசாமி வாழ்த்தி பேசி னார். 2-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார்.

    முதல் நாளில் மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப் பட்டது. தாவரவியல் துறை பேராசிரியர் முருகன் அளித்தார்.

    2-ம் நாளில் கிருமி நாசினி திரவம் மற்றும் சலவைக் கட்டி எண்ணெய் தயாரிப்பு பயிற்சி வழங்கப் பட்டது. வேதியியல் பேராசிரியர் நசீர் பயிற்சியை வழங்கினார்.

    3-ம் மற்றும் 4-ம் நாட்களில் மாணவர்க ளுக்கு சீன மற்றும் பிரான்ஸ் நாட்டுக் கலாசார உணவு, சமையல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்தி ருந்தார்.

    ×