என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்சிக்கு"
- வேப்பமூட்டில் பாதயாத்திரை நிறைவு
- பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள்
நாகர்கோவில் :
நாகர்கோவில் தொகுதிக் குட்பட்ட பகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை மேற்கொண்டார். வேப்பமூட்டில் பாதயாத்திரை நிறைவு செய்து அண்ணாமலை பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள்பாரதிய கட்சியினுடைய இரும்பு தூண்களாக நீங்கள் விளங்குகிறீர்கள். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு கடந்த மாதம் 2-ந்தேதி குமரி மாவட்டத்தில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. ஒரு மாதத்தில் என் மண் என் மக்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களை தற்போது சந்தித்துள்ளேன். மூன்று நாட்களாக குமரி மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறேன்.
பாரதத்திற்கு துணை நிற்கும் மண் நமது மண். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை செய்துதம்பி பாவலர், ஜீவானந்தம் அய்யா வைகுண்டர் பிறந்த மண்ணாகும். காமராஜர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க தி.மு.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மதத்தை பிடித்து தி.மு.க. அரசியல் செய்தது.
இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் என இரண்டாக பிரித்து தி.மு.க. அரசியல் செய்தது. தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகத்தை தாண்டி காமராஜரை வெற்றி பெற வைத்த மண்ணாகும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர்.காந்திக்கு வாக்களித்து அவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி உள்ளீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது குமரி மாவட்டத்தின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட நெய்யாறு அணையில் தண்ணீர் வரவில்லை. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு கலைவாணர் பெயரை மாற்றி விட்டு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என துடித்தார்கள். இதை தடுக்க பாரதிய ஜனதாவினர் கடுமையாக போராடினார்கள். இதன்விளைவாக மீண்டும் கலைவாணர் பெயர் மாநகராட்சிக்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் பேசும்போது தமிழக பாரதிய ஜனதா கட்சி வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை கடன் வாங்குகிறார்கள் என்று பேசியுள்ளார். வேறு வேறு கட்சியிலிருந்து தலைவர்களை வாங்கும் அளவிற்கு பாரதிய ஜனதா இல்லை. இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும்போது தி.மு.க. அரசு அவரை கேவலப்படுத்தியது.
3 ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி தமிழகத்திற்கு வரும்போது நேருவின் மகளே வா என்று வரவேற்றது. குமரி மாவட்ட தலைவர்களின் வரலாறு பாட புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு அடிமையாக உள்ளது. தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்களாக பார்க்கிறோம். ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே 208 கோடி ரூபாய் செலவில் பாலம்அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. 1964-ல்தனுஷ்கோடியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தனுஷ்கோடி யாரும் கண்டு கொள்ளவில்லை.
6 முறை தி.மு.க. ஆட்சி செய்த பிறகு கூட தனுஷ்கோடிக்கு என்ன செய்தார்கள். ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ரூ.208 கோடியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். ரூ.78 கோடியில் சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். 1964-க்கு பிறகு தனுஷ்கோடிக்கும எதையும் தி.மு.க. செய்யவில்லை. ஆனால் பாரதிய ஜனதா அரசு தான் செய்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துண்டு சீட்டில் எழுதிக் கொடுப்பதை படித்து வருகிறார். 2004 முதல் 2014வரை 85 மீனவர்கள் இலங்கை படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்களின் பாதுகாவலனாக பாரதிய ஜனதா அரசு விளங்குகிறது. ஆனால் ராமநாதபுரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுக்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை என்று பேசியுள்ளார்.
நடிகர் வடிவேல் காமெடி விட இந்தியா கூட்டணியில் திமுக இருப்பது மிகப்பெரிய காமெடியாகும். மீனவர்களுக்கென்று தனி அமைச்சரவை உருவாக்கியது பாரதியஜனதா அரசு தான்.அதில் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அவர்களை அமர வைத்து அழகு பார்த்து உள்ளார். மீனவர்களின் நண்பனாக பிரதமர் மோடி உள்ளார். படகுகளுக்கு இரண்டு லட்சத்திலிருந்து ரூ80 லட்சம் வரை மானியம் வழங்கி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்குவது போன்று மீனவர்களுக்கு மீன் விவசாயி என்று அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறார் .
கடன் வாங்குவதில் நம்பர் ஒன் ஆக தி.மு.க. அரசு விளங்குகிறது. கடன் வாங்குவதில் தமிழக மூன்றாவது இடத்தில் இருந்தது. தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடன் வாங்கியதில் தமிழகம் நம்பர் ஒன்னாக உள்ளது .இதை தான் திமுக சாதனையாக உள்ளது.
ஆனால் பிரதமர் மோடி நாட்டினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். தற்பொழுது பொருளாதார வளர்ச்சியல் இந்திய 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த முறை ஆட்சிக்கு வந்து மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம். தமிழகம் குடிப்பதில் முதல் மாநிலமாக விளங்கி உள்ளது. 22 சதவீதம் டாஸ்மார்க் வருவாய் உயர்ந்துள்ளது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் 18 சதவீதம் பேர் மதுவிற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வு சொல்கிறது.
இரண்டு லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என்று சொன்ன தி.மு.க. ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கூறினீர்கள்.அதற்கு கூட ஒரு செங்கல் வைக்க வில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எந்த திட்டத்தையும் குமரி மாவட்ட மக்களுக்கு செய்யவில்லை. 2024 -ல் தி.மு.க. மீண்டும் உங்களை ஏமாற்ற வருவார்கள். 2024-ல் நடக்கும் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல.142 கோடி இந்தியர்களை நம்பி மோடி தேர்தலில் நிற்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக வரும்போது வல்லரசு நாடாக இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறியுள்ளார். சாமானிய கடை கோடி மக்களுக்காக ஆட்சி செய்வேன் என்று பிரதமர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றுவார். 400 எம்பிக்களுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வார். பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றி கன்னியாகுமரி தொகுதியில் இருந்து இருக்க வேண்டும்.பிரதமர் மோடி கன்னியாகுமரி, ராமநாதபுரம் அல்லது தமிழகத்தில் உள்ள தொகுதிக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் மு.க. ஸ்டாலின் உளறிக்கொண்டு வருகிறார். எதிரிகள் பொய்யை பேசும் போது நாம் உண்மையை சத்தமாக பேச வேண்டும். மூன்றாவது முறையாக பிரதமர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பற்றி அனைவரும் நாம் எடுத்துகூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்