என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் முற்றுகை"

    • ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது.
    • ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனரான பாலகுமரேசன் (வயது 48) தனது அலுவலகத்தின் அருகில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் பால்பண்ணையும், குடும்ப உணவகத்தையும் நடத்தி வந்தார்.

    இந்த ஆதவா தொண்டு நிறுவனம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளம் பெண்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு அமர்த்தி மாத சம்பளம் வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் பெறப்பட்ட பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை சுமார் 160 ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் வந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதே போல் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் அவர்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. இதனிடையே ஆதவா நிறுவனத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் ' திடீர் திடீரென' 2 நாட்கள் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தவர்கள் சார்பில் சிலர் அந்த பால் பண்ணையில் முகாமிட்டனர். இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பல்வேறு இடங்களை சேர்ந்த தற்காலிக ஆசிரியர், ஆசிரியைகள் 65 பேர் நேற்று திரண்டு வந்து அதிரடியாக பால் பண்ணைக்குள் நுழைந்தனர். தாங்கள் இந்த பால் பண்ணையின் பங்குதாரர்கள் என்று உரிமை கோரிய அவர்கள் பால குமரேசனின் விருப்பத்தின்படியே இங்கு வந்துள்ளதாகவும், மற்றவர்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் குழுவினரை பார்த்து எவ்வித ஆவணமும் இல்லாத உங்களால் இந்த பால் பண்ணையை உரிமை கோர இயலாது என்றும், இதே போல் மற்றொரு தரப்பினரும் வந்தால் அது பெரும் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்பதால் இங்கிருந்து உடனே சென்று விடுங்கள் என்றும் அறிவுறுத்தினர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆசிரியர் குழுவினர் சோகத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். தொடர்ந்து பால்பண்ணையில் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

    • புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவர்களை சில வாலிபர்கள் தாக்குவதாக கிடைத்த தகவலின் பேரில் மாணிக்கம் அங்கு சென்றார். அப்போது, மாணவர்களை சிலர் அடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த இளைஞர்கள் ஆசிரியர் மாணிக்கத்தையும் தாக்கினர்.

    இதில் காயமடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், சுமார் 20க்கும் மேற்பட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியரை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனால் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×