search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை வளங்கள்"

    • தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது.
    • ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.

    செய்துங்கநல்லூர்:

    பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். இந்த பனைமரம் இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென்மாவட் டங்களில் தான் அதிகமாக பனைமரங்கள் காணப்படு கிறது.

    வெகுவாக குறைந்தது

    ஒருக்காலத்தில் தாமிரபரணி இருகரையிலும கோடிகணக்கில் பனை மரங்கள் இருந்தன. இங்கு ஒவ்வொரு ஊரிலும் பனைத்தொழில் அதிகமாக நடந்தது. பனைத்தொழிலாளிகளும் அதிகமாக வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடத்தில் பனைத் தொழில் வெகுவாக குறைந்தது. இங்கிருந்த பனை மரங்கள் சுமார் 80 சதவிகிதம் குறைந்துவிட்டது.

    இதில் தப்பி தவறி ஆதிச்சநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.

    தற்போது பனை மரங்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனை மரங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு அதற்கான ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    1 கோடி பனைமர விதைகள்

    இது மனதுக்கு ஆறுதலை தந்து வந்தது. இதை தவிர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 1 கோடி பனைமர விதைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடப்பட்டு வரு கிறது. ஆனாலும் மரங் களை அழிக்க செயற்கை யோடு இயற்கையும் போட்டிப் போடுகிறது. தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் அடிக்கும் காற்றில் ஆங்காங்கே வருடம் தோறும் மரங்கள் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி விட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்று வட்டாரப்பகுதி களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    காற்றின் காரணமாக இந்த தீ விபத்துகள் அனைத்தும் பெரிய அளவில் மரங்களை பாதித்துள்ளது. குறிப்பாக பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

    மரங்கள் கணக்கெடுப்பு

    கடந்த 1-ந் தேதி ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள கரை மற்றும் உள்பகுதியில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் தனி யாருக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து சேதமானது. தீ பிடித்த மறுநாள் இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை யினர் ஆய்வு மேற்கொண்டு தீயில் எரிந்த மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

    இந்த மரங்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித் துறையினருக்கு சொந்தமானது. ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள எந்த மரங்களையும் பராமரிப் பதில்லை.

    எரிந்த பனைமரங்களை சுற்றி ஏராளமான காய்ந்த பனை ஓலைகள் கிடந்த காரணத்தி னால் தான் இந்த தீ விபத்து மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது.

    இந்த மரங்களை பொதுப் பணித்துறையினர் பராமரித்து வைத்திருந்தால் அதிகமான பனை மரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தாமிர பரணிக்கரையில் உள்ள பனைமரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மரங்களையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    துளிர்விடத் தொடங்கியது

    இதற்கிடையில் 2 வாரத்திற்கும் மேல் ஆன காரணத்தினால் தீயில் எரிந்த பனைமரங்களில் பெரும்பாலான பனை மரங்கள் குருத்தோலை விடத்தொடங்கி உள்ளது. இதைக்கண்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது:-

    பனை மரங்கள் ஒரு முறை தீயில் எரிந்தால் அதன்பின்னர் அதை வளர்ப்பது மிகவும் கடினம். ஆனால் தாமிரபரணிக் கரையில் நீர் படுகையில் இருந்த காரணத்தினால் தற்போது இந்த மரங்கள் அனைத்தும் துளிர் விடத்தொடங்கி உள்ளன.

    எனவே இந்த எரிந்த மரங்களில் உள்ள ஓலைகள், நுங்குகள் என அனைத்தை யும் அகற்றி அனைத்து பனை மரங்களையும் முறை யாக பராமரித்து வருடம் தோறும் இந்த பனைமரங்க ளில் உள்ள காய்ந்த ஓலைகளை அகற்றினாலே காற்றுக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே பொதுப்பணித் துறையினர் இந்த வேலைகளை முறை யாக செய்ய வேண்டும்.

    தாமிரபரணி ஆற்றுப்படு கையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. இந்த பனைமரங்களில் வருடம் தோறும் ஏற்படும் தீ விபத்துக்களில் பனை மரங்கள் எரிந்து சேதமாகும் நிலை தொடர்ந்து வருகிறது. வருடம்தோறும் இந்த பனை மரங்களை பராமரித்து வைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாது.

    எனவே இந்த மரங்களை பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தீ விபத்தில் கருகிய பனை மரங்கள்.

    தீ விபத்தில் கருகிய பனை மரங்கள்.


     


    ×