search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் உடைப்பு"

    • காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் சிங். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு முன்பு 2 கார்களை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கார்களை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. மேலும் கார்களின் முன்புறத்தில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகப்பு நிற பெயிண்டும் அடிக்கப்பட்டு இருந்தது. இந்த செயலின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியா பதிவிட்டு வந்ததால் கடந்த 6 மாதங்களாக எனக்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் வந்தது. 8 மாதங்களில் 4 முறை நான் தாக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவி மற்றும் மகளுக்கு பாலியல் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர் பாக உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

    • மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கற்களால் சரமாரியாக தாக்கி உடைத்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பார்வதிபுரம் அருகே களியங்காடு சிவன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஈசானிய சிவம் என்ற ராஜா. இவர் இந்து தமிழர் கட்சியின் குமரி மாவட்ட பார்வையாளராக உள்ளார்.

    நேற்று இரவு ஈசானிய சிவம் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டில் முன் பகுதியில் தனது காரை நிறுத்தி இருந்தார். இன்று அதிகாலையில் நாகர்கோவில் பகுதியில் உள்ள கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈசானிய சிவம் தயாராகி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை கற்களால் சரமாரியாக தாக்கி உடைத்தனர். வீட்டின் மீதும் கற்களை வீசினார்கள். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இது குறித்து ஈசானிய சிவம் இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமராவில் காரை உடைத்த வாலிபர்களின் முகம் தெளிவாக பதிவாகி யுள்ளது.

    இதையடுத்து அவர்கள் யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசில் ஈசானிய சிவம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×