என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்போக்கள்"

    • தப்பி ஓடிய டிரைவர்களுக்கு வலைவீச்சு
    • டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய்த் துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற னர். செம்மண் கடத்தலை தடுக்க போலீ சார் வாகன சோதனை யிலும் ஈடுபட்டு வருகின்ற னர். இருப்பினும் கடத்தல் சம்பவம் தொடர்ந்தே வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் துறையினரை பார்த்ததும் லாரிகளை நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் தப்பிச்செல்வது வாடிக்கை யாக நடந்து வருகிறது.

    நேற்று கொல்லங்கோடு அருகே உள்ள சந்தனபுறம் பகுதியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டெம்போக்கள் வந்தன. அதில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் வாக னங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    உடனடியாக போலீசார் 2 டெம்போக்களையும் சோதனை செய்தபோது அவற்றில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் 2 டெம்போக்களைணயும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து செம்மண் கடத்தி வந்த டெம்போக்களின் 2 டிரைவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
    • போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    களியக்காவிளை:

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மீன், கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து சாலையோரம் கொட்டிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக குமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் பளுகல் வழியாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கழிவுகளை ஏற்றி வருவதாக புகார்கள் உள்ளன. அதனை கட்டுபடுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டுள்ளார்.

    அதன் பேரில் அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி டெம்போ வேகமாக வந்தது. சந்தேகமடைந்த போலீசார் அதனை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது என தெரிய வந்தது. வாகனம் மீதும் வாகனத்தின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த சமர்க்கான் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கைதான டிரைவர் முகமது, குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.

    களியக்காவிளை சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் ஆன்றோகிவின் தலைமையிலான போலீசார் வாகன சோதனையின் போது வேகமாக வந்த ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மாட்டு கொழுப்புகள், மாட்டு எலும்புகள் மற்றும் மாட்டு இறைச்சி கழிவுகள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஓட்டிச் சென்ற தென்காசி ராஜாநகர் பகுதியை சேர்ந்த சுப்பையா(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×