search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் அகார்கர்"

    • கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
    • சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார்.

    இந்திய அணி தேர்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேஎல் ராகுல் இடம்பெறாறது குறித்து அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். டி20 உலகக் கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட எங்களுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்தான் தேவை.

    அதனால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளோம். சாம்சன் அனைத்து ஆர்டர்களிலும் ஆடுவார். அதனால் இது யார் சிறந்தவர்கள் என்பது பற்றியதல்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதை பற்றியது.

    • விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கவலையும் இல்லை.
    • ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமானது.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தேர்வு குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    விராட் கோலி ஸ்டிரைக் ரேட் மற்றும் ரிங்கு சிங் இடம் பெறாதது குறித்து அகார்கர் விளக்கமளித்தார்.

    அதில் அஜித் அகார்கர் கூறியதாவது:-

    விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கவலையும் இல்லை. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமானது. அவர் எந்த தவறும் செய்யவில்லை, சுப்மன் கில் கூட.

    அணியில் இரண்டு ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டது. மேலும் பேட்டிங் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் ரோகித் போட்டியின் போது ஆலோசனை செய்ய பயனுள்ளதாக இருக்கும். இந்த முடிவை எடுப்பது ரோகித் சர்மாவுக்கு கடினமாக இருந்தது. அணிக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

    • ஒரு ஆஃப்-ஸ்பின்னரை சேர்ப்பதற்கான விருப்பம் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
    • துரதிர்ஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை.

    டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ந் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்காத சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

    அதில் ரோகித் கூறியதாவது:-

    4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை. அதற்கான காரணம் என்பது இப்போது நான் கூறவிரும்பவில்லை. அமெரிக்காவில் நடைபெறும் போட்டியின் போது புரியும்.

    ஒரு ஆஃப்-ஸ்பின்னரை சேர்ப்பதற்கான விருப்பம் பற்றி நாங்கள் விவாதித்தோம். துரதிர்ஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் அதிகம் கிரிக்கெட் விளையாடவில்லை. இதனால் அஸ்வின் மற்றும் அக்சரை எடுப்பதில் விவாதம் இருந்தது. 2 இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். மேலும் அக்சர் 50 ஓவர் உலகில் இருந்து சிறப்பாக ஆடி இருக்கிறார். அவர் நன்றாக பந்துவீசுகிறார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
    • இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
    • ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை

    ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

    ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

    இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    ×