search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலுசு திருட்டு"

    • குழந்தை காலில் இருந்து கழட்டிய போது சிக்கினார்
    • ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோவில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர். இதில் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த துரைமுருகன் மனைவி குணசுந்தரி தனது கை குழந்தையுடன் சாமி கும்பிட வந்தார். கோவில் வாசலில் உள்ள கற்பூர அகாண்டம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பெண் ஒருவர் குழந்தை காலில் போட்டிருந்த கால் கொலுசை திருடி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த குணசுந்தரி கூச்சலிட்டார்.

    அங்கிருந்த பக்தர்கள் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை கையும், களவுமாக பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தனார்.

    போலீஸ் விசாரணையில் அவர் ராணிப்பேட்டை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அம்சவேணி என்பதும், இவர் குழந்தை காலில் போட்டு இருந்த கால் கொலுசை திருடியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அம்சவேணியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×