என் மலர்
நீங்கள் தேடியது "மகாகாளி அம்மன்"
- விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மகாகாளி அம்மன், வீரமாகாளி அம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவிளக்கு போடுதல், சிறப்பு அர்ச்சனை ஆகியவை நடந்தது.
பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.