search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small and Medium இEnterprises"

    • ஈரோடு பெரியார் நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழி ல்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (21-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெ றுகிறது.
    • புதிய தொழில் முனைவோர் தொ ழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்தி ய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கிய இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழி ற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழி ற்சாலைகளை நிறுவுவ தற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவு களை விரிவுபடுத்துவத ற்கும், உற்பத்தியை பன்முக ப்படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டதின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    இதையொட்டி ஈரோடு பெரியார் நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழி ல்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா இன்று (21-ந் தேதி) முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெ றுகிறது.

    இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் எங்கள் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்ச ங்கள், மத்திய, மாநில அரசு களின் மூலதனமானியங்கள் புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரி வான விளக்கங்கள் தரப்படு கிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கபடும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

    இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர் தொ ழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்தி ய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்காரா தெரிவித்துள்ளார்.

    ×