என் மலர்
நீங்கள் தேடியது "10 கோடி"
- கும்பமேளாவில் இதுவரை புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது.
- அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும்.
கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கும்பமேளாவில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.
இன்று மட்டும் மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.
அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது சுமார் 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும் பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை.
பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் முக்கிய விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என தெரிவித்தது.
- இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
- தமிழக அரசு சார்பில் இமாச்சலுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
சென்னை:
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது.
மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங்கிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.