என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குசாவடி அமைவிடம் குறித்த"

    • மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குசாவடி அமைவிடம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • இதில் மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வாக்குசாவடி அமைவிடம் குறித்த ஆய்வுக்கூட்டம் தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் நடந்தது.

    தேர்தல் துணை தாசில்தார் அறிவ ழகன் முன்னிலை வகித்தார். இதில் மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 277 பூத்கள் உள்ளன. இந்த பூத்களில் 15-ல் இருந்து 20 பூத்களை ஒருங்கிணைத்து அந்த பூத்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கூட்டம் நடத்த வேண்டும்.

    வாக்களர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்.

    பூத்களில் வாக்குசாவடி அலுவலரின் அலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ள அறிவிப்பினை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

    ×