என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆவணி மூலத் திருவிழா"
- சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து பக்தர்கள் பரவசம்
- 3 முறைவலம் வந்து திருவிளையாடல் காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிரெயில் நிலையசந்திப்பில் அமைந்து உள்ள குகநாதீஸ்வ ரர்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆவணி மூலதிருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாகடந்த 19-ந்தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் போது ஒவ்வொரு நாட்களும் இரவு 7மணிக்கு சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகளை சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். அப்போது தட்டுவாகனத்தில் சிவபெருமான் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க 3முறைவலம்வந்து திருவிளையாடல் காட்சிகளை சித்தரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
6-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நால்வர் திருவிழா நடக்கிறது. அப்போது பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத் தில் சிவபெருமானுடன் நாயன்மார்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்ஆகிய 4 நாயன்மார்களும் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி 3முறை வலம் வந்து பானனுக்கு அங்கம் வெட்டியகாட்சி நடக்கிறது.
ஆவணி மூலத் திருவிழா நிறைவு பெறுவதையொட்டி 29-ந்தேதி காலையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.