search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accidents are more likely to occur in places விபத்துக்கள்"

    • சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மேற்கண்ட நபர்க ளின் பட்டியலை அந்தந்த காவல் நிலைய போலீசார் தயாரித்து ஒப்படைக்க கூறப்பட்டுள்ளது.
    • இதை தனிப்பிரிவு போலீ சார் உறுதிப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கூறியதாவது :-

    சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மேற்கண்ட நபர்க ளின் பட்டியலை அந்தந்த காவல் நிலைய போலீசார் தயாரித்து ஒப்படைக்க கூறப்பட்டுள்ளது.

    இதை தனிப்பிரிவு போலீ சார் உறுதிப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்க ளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேற்படி குற்றங்களை தடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    ரவுடி பட்டியலில் உள்ள வர்களை தீவிர கண்கா ணிப்பில் வைக்கவும், மாவட்டத்தில் போதை வஸ்துக்களின் புழக்கத்தை அறவே ஒழிக்க கடும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அடிதடி சம்பவத்தில் காயமடைந்த வர்கள் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக வழக்கு பதிவு செய்து நட வடிக்கைகளை மேற்கொள்ளவும்,கடந்த 6 மாத காலமாக மருத்துவ மனைகளில் இருந்து வந்த தகவல்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்தந்த காவல் நிலை யங்க ளில் கேட்கப்பட்டுள்ளது.

    காவல் நிலையங்களுக்கு வரும் சாமானியர்களின் புகார் மனுக்கள் மீது புகார் தன்மைக்கேற்ப உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் காவலர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும்,அதே சமயம் காவலர்கள் தங்கள் குறைகளை என்னிடம் கூற எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம் என்றும் அவர்களின் குறைகளின் தன்மை கேட்ப உடனடி தீர்வு காணப்படும் என்று தெரி வித்தார்.போக்குவரத்து விபத்துக்களை தடுக்கவும், விபத்தினால் ஏற்படும் மர ணங்களை குறைக்கவும், விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் இடங்களை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

    மலையோர கிரா மங்களில் அன்னியர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலை யங்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ×