search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓமன்"

    • 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஓமன் அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி சார்பில் சோயப் கான் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் (11) அடித்தார். இதன் மூலம் 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், கேப்டன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 12 மற்றும் 24 ரன்களை அடித்தனர்.

    பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில், இங்கிலாந்து அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஓமன் சார்பில் பிலால் கான் மற்றும் கலீமுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அந்த பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    • ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
    • மழையால் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, குட்டி அணியான ஓமனை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக மழையால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

    இதையடுத்து எஞ்சிய இரு லீக்கில் வென்றால் மட்டும் சூப்பர்8 சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற வாழ்வா-சாவா சிக்கலுக்கு மத்தியில் ஓமனுடன் இன்று களம் காணுகிறது. ஆனால் இந்த ஆட்டத்திற்கும் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை இந்த ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    இங்கிலாந்தை பொறுத்தவரை ஓமன் மற்றும் நமிபியாவை வீழ்த்த வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி கடைசி லீக்கில் ஸ்காட்லாந்தை சாய்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

    அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தேர்வாகும். ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து (+2.164) வலுவாக இருப்பதால் இங்கிலாந்து (ரன்ரேட் -1.800) இரு ஆட்டத்திலும் மெகா வெற்றியை பெற்றாக வேண்டும்.

    முன்னதாக கிங்ஸ்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து (டி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டுகின்றன. தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமாகும்.

    • ஸ்காட் லாந்து 5 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முன்னிலையில் உள்ளது.
    • ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகிறது.

    ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கிய 20-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து-ஓமன் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஓமன் கேப்டன் அக்யூப் இல்யாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய ஓமன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஸ்காட்லாந்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் பிரதிக் அதாவாலே 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), அயன்கான் 39 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஷப்யான் ஷரீப் 2 விக்கெட்டும், மார்க் வாட், பிரட் வீல், கிறிஸ் சோலே, கிறிஸ் கிரீவ்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பிரண்டன் மெக்முல்லன் 31 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் முன்சே 20 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பிலால் கான், அக்யூப் இல்யாஸ், மெக்ரன் கான் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஸ்காட்லாந்து 5 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16-ந்தேதி எதிர்கொள்கிறது.

    ஓமனுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி நமீபியாவிடம் சூப்பர் ஓவரிலும், ஆஸ்திரேலியா விடம் 39 ரன்னிலும் தோற்று இருந்தது. கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 14-ந்தேதி மோதுகிறது.

    • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அரை சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

    இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த ஓமன் திணறியது.
    • ஆட்ட நாயகன் விருது டேவிட் வைசுக்கு வழங்கப்பட்டது.

    பிரிட்ஜ்டவுன்:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.

    நேற்று நடந்த ஆட்டங்களில் கனடாவை அமெரிக்காவும், பப்புவா நியூகினியா வை வெஸ்ட் இண்டீசும் வீழ்த்தின.

    இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் திணறியது.

    ஆட்டத்தின் முதல் 2 பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தது. ரூபன் டிரம்பெல்மேன் வீசிய அந்த ஓவரில் பிரஜாபதி, அகில் இல்யாஸ் ஆகியோர் டக் அவுட் ஆனார்கள்.

    அதன்பின் 3-வது ஓவரில் டிரம்பெல்மேன் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது பந்தில் நசீன் குஷி (6 ரன்) அவுட் ஆனார்.

    அடுத்து மக்சூத் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓமன் 37 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. பின்னர் காலித் கைல்-அயன்கான் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடியது.

    இந்த ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார்.

    நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நமீபியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் மைக்கேல் வான்லிங்கன் ரன் எதுவும் எடுக்காமல் ஆவுட் ஆனார்.

    அதன்பின் நிகோலாஸ் டேவின்-பிரைலின்க் ஜோடி பொறுமையாக விளையாடியது. டேவின் 24 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் எராஸ்மஸ் 13 ரன்னிலும் சுமிட் 8 ரன்னி லும் அவுட் ஆனார்கள்.

    அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது. மெக்ரான்கான் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பிரைலின்க் (45 ரன்) அவுட் ஆனார். 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை.

    3-வது பந்தில் கிரீன் அவுட் ஆனார். 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப் பட்டது. 5-வது பந்தில் டேவிட் வைஸ் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது.

    நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.

    டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது டேவிட் வைசுக்கு வழங்கப்பட்டது.

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.
    • சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மதுரை:

    குடும்ப வறுமை காரணமாகவும், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும் பட்டதாரிகள் முதல் படித்தவர்கள் வரை பலரும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதை கனவாக கொண்டுள்ளனர்.

    அவர்களின் பசிக்கு இரைபோடும் வகையில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனங்கள் பல்வேறு ஆசைகளை அவர்களுக்கு விதைத்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கிறார்கள்.

    அவ்வாறு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பலர் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் ஏராளமாக அரங்கேறியுள்ளன. உற்றார், உறவினர்களிடம் கடன் வாங்கி, இருக்கும் நகைகளை அடமானம் வைத்து கிடைத்த பணத்துடன் ஆசைகளுடன் வெளிநாடுகளுக்கு பறக்கும் பலருக்கும் அது நிராசையாகவே இருந்துள்ளது.

    இதில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜெண்டுகள் இதற்காக பணிபுரிந்து வருகிறார்கள். வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு பணி பெண்கள் தேவை மாதம் கை நிறைய சம்பளம் என்கின்ற விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.

    ஆனால், இது பெரிய வேலை. என்பதனால் பலரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சுற்றுலா பயணிகளாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    அவ்வாறு செல்லும்போது, எதாவது பிரச்சினை ஏற்பட்டால், அரசு உதவி செய்வது ரொம்பவே கடினம். இதற்குத் தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு வீட்டு வேலை என்று நம்பி வெளிநாட்டிற்குச் சென்ற தென் மாவட்டங்களைச் சார்ந்த இளம்பெண்கள் அங்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அதாவது வேலை என அழைத்துச் சென்று ஒரு கும்பல் பெண்களை பாலியல் தொழில் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஏலம் மூலம் முகம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்து விடுவதாகப் புகார் பெறப்பட்டுள்ளது.

    அந்த வகையில், ஓமன் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் சென்று பெண்களை ஏலத்துக்கு விடுவதாகவும், அதில் மாட்டிக்கொண்ட தன் தாயை மீட்டு தர வேண்டுமென மகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து ஓமன் நாட்டிலுள்ள ஏஜெண்டு ருக்மணியை ரூ.2, 3 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ருக்மணி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை தனி அறையில், அதுவும் ஆண்கள் தங்கிருந்த அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினரை தொடர்பு கொள்ள முடியாததால் இதுகுறித்து ருக்மணியின் இரண்டாவது மகள் செல்வலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் நேரடியாக மனுவை கொடுத்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், நானும் என் அக்காவும் கல்லூரியில் படித்து வருகிறோம். கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருவதால் தன் தாயை வெளிநாட்டில் இருந்து அழைத்து வர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றார்.

    இதையடுத்து ஓமன் நாட்டில் தவித்து வந்த அந்த பெண் பல்வேறு சமூக அமைப்புகள் உதவியுடன் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டார். இதேபோல் ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

    ×