search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "333 பள்ளிகளில்"

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • குமரி மாவட்டத்தில் 375 பள்ளிகளில் உள்ள 28,337 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    நாகர்கோவில் : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிக்குட்பட்ட 42 பள்ளிகளில் உள்ள 3994 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த திட்டம் தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று முதல் அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள மேலும் 333 பள்ளிகளில் படிக்கும்24,343 மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக குமரி மாவட்டத்தில் 375 பள்ளிகளில் உள்ள 28,337 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர். முதலமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி தோவாளை ஊராட்சி ஒன்றியம், மாதவலாயம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. விழாவில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிய தாவது:-

    எங்கு படித்தோம் என்பது முக்கியமல்ல எப்படி படித்தோம் என்பதே முக்கியமாகும்.அரசு பள்ளியில் படித்த பலரும் சாதனையாளர்களாக வந்துள்ளார்கள். அதேபோல் மாணவர்களாகிய நீங்களும் பல்வேறு துறைகளில் தங்களது சாதனைகளை படைக்க வேண்டும். ஒரு தவறான சம்பவம் நடந்து விட்டால் அந்த சம்பவத்தை கூட ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் பரப்பும் அளவிற்கு சமூக ஊடகங்கள் வளர்ந்து விட்டது. எனவே சமூக ஊடகங்களை நம்பி மாணவர்கள் இருக்கக்கூ டாது. நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வரு கிறது. இது மிகப்பெரிய தவறான செயலாகும். அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் ஒரு சில தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நாங்கள் அதிகம் சம்பளம் வாங்கும் ஆசிரியரிடம் படிப்பதாக கூற வேண்டும். ஏன் இப்படி என் சொல்கிறேன் என்றால் சிலர் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நான் இந்த பள்ளியில் படிக்கிறேன் அந்தப் பள்ளியில் படிக்கிறேன் என்று கூறுவார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அனைவரும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எப்படி முடியும். சந்திரயான் மிகப்பெரிய வெற்றி அடைய செய்ததும் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த பாடமாக இருந்தாலும் அந்த பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தால் நீங்கள் சாதனை படைக்கலாம். பயாலஜி போன்ற எத்தனையோ பாடங்கள் உள்ளது. இதை படிப்பதன் மூலமாக நீங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யலாம். அரசு பள்ளியில் படிப்பதை நாம் பெருமையாக கருத வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் தாய் உள்ளத்தோடு காலை உணவு திட்டத்தை தந்துள்ளார்கள். காலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள்

    தங்களது குழந்தைக்கு உணவு தயார் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.இந்த காலை உணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகள் பயன்பெறு வார்கள். இந்தஅற்புதமான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இந்ததிட்டத்தை செலவாக கருதாமல் மூலதனமாக கருதுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக கொண்டு வர குப்பை இல்லா குமரி என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், திட்ட இயக்குனர் பாபு, முதன்மை கல்வி அதிகாரி முருகன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஷேக்செய்யது அலி, மாதவலாயம் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினா ராஜேஷ், துணை தலைவர் பீர் முகமது, தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வன், குமரி மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×