என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓணம் விழா"
- ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
- ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.
கோவை:
கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.
ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- கேரள மாநில சுற்றுலா துறையின் சார்பில் ஓணம் விழா கொண்டாடி வருகின்றனர்.
தக்கலை :
தக்கலையில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பெருமளவில் வந்து செல்கின்றனர்.
பொதுவாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு பத்மனாபபுரம் அரண்மனையில் 10 நாள்கள் கோல மிட்டு ஊஞ்சல் கட்டி கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் கேரள மாநில சுற்றுலா துறையின் சார்பில் ஓணம் விழா கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஓணம் ஊஞ்சல் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் ஓணம் பண்டிகை விடுமுறை விடப்பட்டு அரண்மனை திறக்கப்படவில்லை.நேற்று வாராந்திர விடுமுறை என்பதால் திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது சம்மந்தமாக பத்மனாபபுரம் கோட்டை அரிமா சங்க தலைவர் பிரைட்டஸ் ஜெயன் கூறுகையில், வருடம் தோறும் கேரளா சுற்றுலா துறை சார்பில் பத்மனாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா10, நாள்கள் நடைபெறும். இந்த வருடம் ஓணம் விழா கொண்டாடாதது அதிர்ச்சியாக உள்ளது.வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடராமல் ஓணம் விழா கொண்டாட அரசு முன்வரவேண்டும் என்றார்.
- தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.
திருவட்டார் :
குலசேகரம் அருகே உள்ள மாஞ்சக்கோணம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் வேல்துரை. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இவரது மூத்த மகள் அனுசியா (வயது 19), திருவிதாங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்படுவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அனுசியா தெரிவித்துள் ளார். இதற் காக புத்தாடை அணிந்து அவர் நேற்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார்.
மாலையில் மகள் வந்து விடுவார் என பெற்றோர் காத்திருந்த நிலையில், அனுசியா வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அங்கு விழா முடிந்ததும் அனுசியா அங்கிருந்து சென்று விட்டதாக கூறி உள்ளனர்.
இதனை தொடர்ந்து தோழிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அனுசியா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுகுறித்து குலசேகரம் போலீசில் வேல்துரை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.
- சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
- நிகழ்ச்சியில் மாணவர்கள் இருதரப்பினராக பங்கேற்று நிகழ்சிகளை நடத்தினர்
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று இந்த கல்லூரியில் ஓணப்பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் இருதரப்பினராக பங்கேற்று நிகழ்சிகளை நடத்தினர். இந்த நிலையில் திடீரென்று மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு வெளியே கொண்டு சென்று விட்டு கதவை இழுத்து மூடியுள்ளனர்.
ஆனால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்க ளிடையே எதற்காக மோதல் ஏற்பட்டது எப்படி? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமை யான மாணவர்களால் தான் மோதல் ஏற்பட்ட தாகவும் அடிக்கடி இது போன்ற மோதல்கள் நடப்ப தாகவும் பலர் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்