என் மலர்
நீங்கள் தேடியது "பக்தி பேச்சாளர்"
- கிருபானந்த வாரியாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கிருபானந்தவாரியாரின் படத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அனுசுயா மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிருபானந்தவாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், முத்தையா, சிவராமன், சுப்பிரமணியன், ஆறுமுகம், சுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், மகா ஸ்டுடியோ சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.