search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் அறை"

    • சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது.
    • விபத்தில் சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது.

    சமையலுக்கு பயன்படும் LPG சிலிண்டர் மூலம் அவ்வப்போது ஏற்பட்டு வரும் விபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் LPG சிலிண்டர் இருப்பதால் அதை கவனமாக கையாளும் விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுவது அவசியம்.

    இந்த கூற்று 100 சதவீதம் உண்மை என நிரூபிக்கும் வகையில் மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வெளியாகி காண்போரை திடுக்கிடச் செய்து வருகிறது. அந்த, சிசிடிவி வீடியோவில் பெண் ஒருவர் வீட்டின் சமயலறையில் நின்றுகொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென அவரது அருகில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது.

    அந்த அதிர்வில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்த அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். ஆனாலும் அந்த சமையலறை முழுவதுமாக வெடித்துச் சிதறியது. சிலிண்டரில் கொஞ்சமான அளவே கேஸ் இருததால்தான் பெரிய அளவில் விபத்து ஏற்படாமல் அந்த பெண் உயிர்தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    • சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    • மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * சாமி அறை போல் சமையல் அறையும் தூய்மையாக இருந்தால் தான் ஈ, எறும்பு, புழு, பூச்சிகள் வராது. வெங்காயம், பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டால் அந்த வாசத்திற்கே பூச்சிகள் வராது. மேலும் சமையல் முடிந்ததும் சமையல் மேடையை சுத்தமாக துடைத்து ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    * அரிசி பாத்திரத்தில் வேப்பிலை போட்டு வைத்தால் வண்டு வராது. பருப்பு டப்பாக்களில் பூண்டின் நடுக்காம்புடன் உப்பை சேர்த்து துணியால் முடிச்சு போட்டு வைத்தால் பருப்பின் சுவையும் குறையாது, வண்டும் வராது.

    * காளான் மற்றும் கத்தரிக்காயை பிளாஸ்டிக்கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

    * ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரே டப்பாவில் மூடி வைக்கலாம்.


    * உலர் திராட்சை, பேரீச்சையை வைக்கும் டப்பாக்களில் ஓரிரு கிராம்புகளை போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

    * மூலிகைகள் மற்றும் மூலிகை கீரைகளை பிளாஸ்டிக் கவரில் கட்டித்தான் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    * அரைத்த மிளகாய் தூள் வைத்திருக்கும் டப்பாவின் மையப்பகுதியில் இரண்டு மிளகாய் வற்றல் போட்டு வைக்க தூளின் நிறம் மற்றும் தரம் மாறாது. பெருங்காயத்தையும் போடலாம்.

    * முருங்கைக்காயை அப்படியே பேப்பரில் சுருட்டி வைத்தால் ஒருவாரம் கெடாது. இதேபோல வாழை இலையை வைத்தால் காய்ந்தோ பழுத்தோ போகாது.

    * ஆப்பிளை நறுக்கி சர்க்கரை தண்ணீரில் போட்டு எடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டப்பாவில் கொடுத்து அனுப்பினால் அப்படியே நிறம் மாறாமல் இருக்கும்.

    * அத்தி, கிஸ்மிஸ் பழம் போன்றவற்றை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. அக்ரூட் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் எளிதாக உடைக்கலாம்.

    * முருங்கை பிஞ்சை ரசத்தில் போட்டால் ரசம் ருசியாக இருக்கும். மோரில் சுக்கு பொடித்து சேர்க்க சுவை கூடும். கடலை மாவு மற்றும் பார்லி மாவை பாதி பாதி சேர்த்து பக்கோடா செய்தால் ருசி அமோகமாக இருக்கும்

    * அப்பளம், வடகம், வற்றலில் (காய்ந்த) வற மிளகாயை போட்டு வைக்க வண்டு, பூச்சிகள் வராது.


    * டீ தூள் டப்பாவில் ஆரஞ்சு பழத்தோலை போட்டு வைத்தால் டீ தூளில் ஆரஞ்சு வாசம் வரும். டீயும் ருசியாக இருக்கும்.

    * பச்சைநிற காய்கறிகளை சமைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்க காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும்.

    * முறுக்கு மாவில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட, மொறுமொறுப்பாக நெய் வாசத்துடன் இருக்கும்.

    * நூடுல்ஸ் மீதமானால் அதனுடன் பச்சை காய்கறிகளை நறுக்கிப் போட்டு தயிர் சேர்த்து சாலட் செய்ய சூப்பராக இருக்கும்.

    • நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது.
    • சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.

    இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

    ×