search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலருக்கு"

    • பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது.
    • இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர்:

    கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (52 ) பைனான்ஸ் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (47) இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பரமத்தி அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் சுப்பிரமணி (50) என்பவரை கைது செய்தனர்.இந்த விபத்து குறித்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் கடைசியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    ×