search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.பி.ஜி."

    • நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    டெண்டர் நீட்டிக்க கோரிக்கை

    இதற்காக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் டெண்டர் மூலம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து இருந்ததால் டெண்டரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என சங்கம் சார்பில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தும் அடிக்கடி சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆயில் நிறுவனங்களும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

    ஒப்பந்தம் கையெழுத்து

    நேற்றுடன் நடைமுறையில் உள்ள டெண்டர் முடிவடைந்துள்ளதால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஐ.ஓ.சி. ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கையெழுத்திட நேற்று நாமக்கல் வந்தனர்.

    செல்லப்பம்பட்டியில் உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் முன்னிலையில் சங்க உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடிதம் வழங்கினர்.

    பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ரான் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    சங்கத்தின் சார்பில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அது ஏற்கப்பட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயில் நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

    இதன் மூலம் தென் மண்டலம் மற்றும் பிற மண்டலங்களில் இயக்கப்படும் 7,500 எல்.பி.ஜி. வாகனங்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×