என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.பி. தேர்தல்"
- எம்.பி. தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் அ.தி.மு.க. சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் அழகுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வர இருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பால கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் சம்பத், மகளிரணி செயலாளர் லதா, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூ ராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், விவசாய அணி காமாட்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்