என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver on attack லாரி"

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.
    • பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.

    மோகன்ராஜின் தங்கையை பிரகாஷ் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    சரமாரி தாக்குதல்

    இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகியோர் மோகன்ராஜின் வீட்டின் அருகே வந்தனர். அப்போது அங்கு குடிபோதை யில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜ் உன்னால் தான் என் தங்கை வாழ்க்கை வீணாகிப் போனது எனக் கூறி கீழே கிடந்த கல்லை எடுத்து பிரகாஷை சரமாரி யாக தாக்கினார். இதில் பிரகாஷ் மண்டை உடைந்தது.

    இதையடுத்து பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் சத்தம்போடவே மோகன்ராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் பிரகாஷை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுகுறித்து பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.

    ×