என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "வெளீயீட்டு விழா"
- ‘வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
- வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மதுரை
மதுரை சட்டக்கல்லூரி அருகில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் நீலம் பதிப்பகத் தின் சார்பில் தி.லஜபதி ராயின் வேடர் நாட்டில் சிங்கங்களும், புலிகளும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழா வில் வழக்கறிஞர் ச.ராஜ சேகர் வரவேற்றார்.
நீலம் பதிப்பகம் வாசுகி பாஸ்கர் தொடக்க உரையாற் றினார். புதுச்சேரி மொழியி யல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்கு நர் பக்தவச்சல பாரதி நூலை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார்.
வழக்கறிஞர் சோளகர் தொட்டி பாலமுருகன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூல் குறித்து பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல் கான், வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் உரை யாற்றினர்.
முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் நூல் ஆய்வுரை யும், நூலாசிரியர் தி.லஜபதி ராய் ஏற்புரையும் ஆற்றினர். விழாவில் திரளான தமிழ் ஆர்வலர்கள், நூல் ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.