search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டய்னர் லாரி"

    • காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.
    • அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் பகுதியில் பிரபல நிறுவனத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு புல்லட் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு தொழிற்சாலையில் இருந்து 88 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் கண்டெனர் லாரியில் ஜார்க்கண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கண்டெய்னர் லாரி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரியில் இருந்து கரும்புகை வந்தது.

    இதனை கவனித்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கிழே இறங்கினார். சிறிது நேரத்தில் கண்டெய்னர் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. மற்ற மோட்டார் சைக்கிள்களும் தீயினால் சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×