என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்"
- டேனிஷ் அலியை மத ரீதியாக ரமேஷ் பிதுரி தாக்கி பேசினார்
- டோங்க் மாவட்டத்தில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 தொடங்கி 21 வரை நடைபெற்றது.
இத்தொடரில் 21 அன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி (62) அவையில் நடந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அம்ரோகா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கன்வர் டேனிஷ் அலி (48) என்பவரை மத ரீதியாக தாக்கி பேசினார். அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதுரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளும் பா.ஜ.க., ரமேஷிடம் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியிருந்தது; ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள டோங்க் மாவட்டத்திற்கு பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான கபில் சிபல், தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:
பா.ஜ.க. வெறுப்பு பேச்சிற்கு வெகுமானம் அளிக்கிறது. ரமேஷ், வெளியில் கூற முடியாத வார்த்தைகளால், டேனிஷ் அலியை மத ரீதியாக மக்களவையிலேயே தாக்கி பேசினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார்கள். டோங்க் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாகும். இது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலைத்தான் குறிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொயித்ரா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் ரமேஷின் நியமனத்தை விமர்சித்துள்ளனர்.
- வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
- சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது
ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.
இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் தொடங்குகிறது. இது 22ம் தேதி வரை என மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறுகின்றன.
"சிறப்பு கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்," என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர், கூட்டத்தில் சிறப்புக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு வலிறுத்தும்.
கூட்டத்தில், சிறப்பு கூட்டத்திற்கான நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 1949 செப்டம்பர் 18 அன்று "இந்தியா எனும் பாரத்" என தொடங்கும் வரைவை சபை ஏற்றது
- இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஜனவரி 26 அன்று செயலாக்கம் பெற்றது
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 அன்று தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.
"அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகஸ்ட் 31 அன்று இதனை அறிவிக்கும்போது தெரிவித்திருந்தார்.
எந்தெந்த பிரச்சனைகள் மற்றும் முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது என்றும் என்னென்ன தீர்மானங்கள் முன்மொழியப்படும் அல்லது மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்தும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், இக்கூட்டத்தொடரில், நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இச்செய்திக்கு ஆதாரம் சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புதுடெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில் அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளதை விமர்சகர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
இதற்கிடையே, இந்தியா-பாரத் பெயர் மாற்ற சர்ச்சை குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா ஆகஸ்ட் 15, 1947ல் சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இந்தியாவிற்கென ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க 389 பேர் உறுப்பினர் கொண்ட "அரசியலமைப்பு சபை" ஒன்று உருவாக்கப்பட்டது. இச்சபை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26 அன்றுதான் செயலாக்கம் பெற்றது.
அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 1ல், 'பாரத்' எனும் பெயரும் 'இந்தியா' எனும் பெயரும் இடம் பெறுகிறது.
4 நாட்கள் விவாதம் செய்த இந்திய அரசியலமைப்பு சபை, 1949 செப்டம்பர் 18 அன்று "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் யூனியனாக இருக்கும்" என தொடங்கும் வரைவை ஏற்று கொண்டது.
இதை குறிப்பிட்டு தற்போதைய சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் (செப்டம்பர்) 18 அன்று தொடங்க போவதையும் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் விவாதிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்