என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூப்பர் 4 சுற்று"
- முதலில் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் 236 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.
கொழும்பு:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. சமர விக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 93 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பதும் நிசாங்கா 40 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது,ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 82 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, தசுன் சனகா, பதரினா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
- பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
- சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகிறது.
6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காள தேசம் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்