என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்லூர்ராஜூ"
- அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர்ராஜூ கூறினார்.
- அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொள்வோம்.
மதுரை
மதுரை மாநகர் அ.தி.மு.க., தெற்கு தொகுதி சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அண்ணாமீது எம்.ஜி.ஆர். அதிக பாசம் கொண்டு இருந்தார்.
தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப்படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். ஆனால் தற்போது கலைஞர் தி.மு.க.வை குடும்ப கட்சியாக மாற்றியுள்ளார்.
அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு படம் ஓடினதும், நான் தான் முதல்-அமைச்சர் என்று சொல்கின்றனர்.
சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர், உடனடி யாக மந்திரி ஆகவேண்டும், உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக் கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் அரசியல்வாதிகளாக உள்ளனர். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.விற்கு தான் உரிமை உண்டு. தி.மு.க. வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்ட னர். கலைஞர் கருணாநிதிக்கு மகன் ஸ்டாலின் அப்பா விற்கு தப்பாமல் பிறந்திருக் கிறார்.
தற்போது சிலர் படித்த வனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலிபேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான். நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் அவர்களை மிதித்து விடுவார்கள்.
ஆளும் கட்சி என்று மப்பில் பேசலாம். அண் ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்த வர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும்.
பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு பெரியார், அண்ணா தான் காரணம். அதிமுக ஆட்சியில் செயல் படுத்திய பல்வேறு திட்டங் களை தி.மு.க. மூடுவிழா கண்டு வருகிறது. எனவே அண்ணாவின் வாரிசு நாம் தான் என பெருமிதம் கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- மதுரையில் நாளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
- முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ தலைமையில் நடக்கிறது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழக பொதுச் செயலாளரு, முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற பாராளு மன்ற தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் மகளிர் குழு, இளைஞர் குழு அமைத்தல், கட்சி வளர்ச்சி பணி, பேரறிஞர் அண்ணா வின் பிறந்தநாள் பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடை பெறுகிறது.
இந்த கூட்டத்தில் கட்சி யின் வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி, மகளிர் குழு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.
எனவே இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டு றவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்