search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை தோல்வி"

    • ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.
    • இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,

    வெங்கரையில் எழுந்தருளியுள்ள வெங்கரைகாளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இக்கோவில் விழா மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு உத்தரவு பிறப்பிக்க கோரி ஒரு தரப்பினர் திருச்செங்கோடு உதவி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 1-ந் தேதி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமூக தீர்வு ஏற்படாததால் அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி, இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    ஆனால் மீண்டும் சுமூக தீர்வு ஏற்படாததால், திருச்செங்கோடு உதவி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெங்கரை காளியம்மன் கோவில் திருவிழா பேச்சு வார்த்தை 2-வது முறையாக தோல்வியடைந்தது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    ×