search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்பாசி சேகரிப்பு"

    • தடை நீக்கத்திற்கு பிறகு கடல்பாசி சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் கடல்பாசிகள் சேகரிப்பதற்கான தடை நீக்கத்திற்கு பிறகு தற்போது கடல்பாசிகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கடற்பாசிகள் 180 மீட்டர் வரையிலான ஆழ்கடல் பகுதிகள், பாறைபகுதிகள், பவளப்பாறை பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரை பகுதிகள், குஜராத், லட்சத்தீவு, அந்த மான் நிகோபார் கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 1,153 வகை கடற்பாசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கடற்பாசிகளில் 60 வகைகள் வணிக முக்கி யத்துவம் பெற்றுள்ளன. இவைகள் உணவு , மருந்து பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.

    தமிழ்நாட்டில் ராமேசு வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 1,863 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள கடல்பகுதிகளில் சுமார் 75 ஆயிரத்து 373 டன் கடற்பாசிகள் இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிரா மங்களை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது மண்டபம், தோணித்துறை, வேதாளை, சீனியப்பா தர்கா ஆகிய கடலோர பகுதிகளில் ஹப்பா பைகஸ் எனப்படும் கடற் பாசிகள் சுயஉதவி குழுக்கள் மூலம் கடலோர பகுதியில் செயற்கை முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கடலில் தானாகவே விளையும் சர்காஸம் எனப்படும் கட்டாக் கோரைபாசிகள் சேகரிப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இந்த வகை பாசிகள் ஆழ்கடலில் பாறைகள் இருக்கும் பகுதியில் வளரு கின்றன. கடல் நீரோட்டம் மற்றும் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்போது வேருடன் பிடுங்கப்பட்டு இவைகள் கரைக்கு வந்து சேருகின்றன. இதுதவிர மீனவர்களும் நாட்டுபடகில் சென்று ஆழ்கடலில் முத்து குளிப்பதைபோல இந்த வகை பாசிகளை சேகரிக் கின்றனர்.

    இதனை கடற்கரை பகுதிகளில் நன்றாக உலர வைத்து ஒரு டன்னிற்கு

    ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்த பணிகளில் பெண்கள் அதிக ளவில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    சர்காஸம் வகை கடற்பாசியில் இருந்து சோடியம் அல்ஜினேட் என்ற வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது டெக்ஸ்டைல் தொழிலில் சாயம் சேர்க்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மருத்துவம், உணவுப்பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகிறது.

    இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், கடலோர பகுதிகளில் போதிய மீன்கள் கிடைக்காததால் குறைந்த வருமானமே கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது கடல்பாசிகளை சேகரிக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது. புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலத்தில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா பணிகள் தொடக்கம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வழமாவவூரில் கடந்த 2-ந்தேதி மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி முருகன் ஆகியோர் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×