search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளியலிட்ட"

    • சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது.
    • தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. திடீரென சாரல் மழையும் பெய்தது. சுசீந்திரம், சாமிதோப்பு, கொட்டாரம் பகுதிகளிலும் இன்று காலை சாரல் மழை பெய்தது. தக்கலை, குலசே கரம், தடிக்காரன்கோணம், அருமனை, குழித்துறை பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 4.2 மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்ய மான சூழல் நிலவு கிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.அவர்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது. அணைகளில் இருந்து 783 கன அடி தண்ணீர் சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.36 அடியாக உள்ளது. அணைக்கு 563 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.80 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ×