என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியர்கள் மோதல்"
- ஆசிரியர்கள் மோதலால் மாணவர்களை அரசு பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்தனர்.
- கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராயபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்க ளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயில்விக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தங்கள் பெற்றோர்களிடம் அவர்கள் கூறினர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் களிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்தனர். ஆனால் மோதல் முடிந்த பாடில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப் பட்டது.
இதனை கண்டித்தும் மாணவ, மாணவிகள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராமத்தில் உள்ள சாவடியில் அமர வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, உதவி கல்வி அலுவலர் சின்ன வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை பின்பு சம்பந்தப் பட்ட ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்தப் பள்ளியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வந்தனர். ஆனால் தற்போது திருமங்கலம், ஆலம்பட்டி மீனாட்சிபுரம் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்களு டைய பிள்ளைகளை அங்கு அனுப்பியதால் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அடிக்கடி ஆசிரியர்களுக்குள் மோதல் நடப்பதால் பிள்ளைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டது. ஆதலால் கல்வி அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.