search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலை நேர படிப்பகம்"

    • மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கோவில் வளாகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டில் ஒரு பகுதியில் மாணவர்கள் படிக்க மாலை நேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    அன்னதானம்

    இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளி, பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் காலையில் சிற்றுண்டி, மதியம் அன்னதானமும் மற்ற நாட்களில் மதியம் அன்ன தானமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கோவில் வளாகத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ், ராணுவம், தீயணைப்பு துறை, ரெயில்வே போன்ற சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டார கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த மைதானத்தில் உடல் திறனை மேம்படுத்து வகையில், நீளம் தாண்டுதல் மைதானம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன.

    மாலை நேர படிப்பகம்

    இந்நிலையில் இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலை புரத்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் ஒரு பகுதியில் மாணவர்கள் படிக்க மாலை நேர படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளை யாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. திருச்செந்தூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் ஆவுடையானூர் மருத்துவர் தர்மராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் ஸ்ரீவை குண்டம் துணை தாசில்தார் அய்யனார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எல்.ஐ.சி. தமிழ்செல்வன், சென்னை திருமலைக்குமார் மற்றும் முத்துமாலைபுரம் ஊர் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவ-மாணவிகளின் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. மாஸ்டர்கள் சிலம்பம் பாப்பையா, கணபதி ஆகியோர் கலந்து கொண்டு சிலம்பம், களறி ஆடினார்கள். முடிவில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பக ராமன் நன்றி கூறினார். 

    ×