search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமிங்கல உமிழ்நீர்"

    • வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    • 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை (ஆம்பர் கிரீஸ்) பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், அந்த பகுதியில் வனத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு திமிங்கல உமிழ்நீர் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    பின்னர், தடை செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீரை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி, கார்த்திகேயன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ், தஞ்சையை சேர்ந்த தமிழரசன், திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 9 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 1 கிலோ 575 கிராம் எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் மற்றும் ஒரு கார், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பம்ப்வெல் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒரு கார் நின்றிருந்தது. அதில் இருந்த சிலர் விலை உயர்ந்த திமிங்கல உமிழ்நீர் என்று அழைக்கப்படும் அம்பர் கிரீஸ் வைத்திருந்தனர்.

    அதனை விற்க வாடிக்கையாளர்களை தேடிக்கொண்டிருந்த நிலையில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சிக்கமகளூர் மாவட்டம் தமிழ் காலனி பகுதியை சேர்ந்த பியாரோஜன் என்கின்ற சேட்டு (37), விட்லா பகுதியை சேர்ந்த பத்ருதீன் என்கின்ற பத்ரு (38), தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் சன்னதி கோவில் தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 575 கிராம் எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் மற்றும் ஒரு கார், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் ஆகும் இது தொடர்பாக மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • மங்களூர் மாநகர போலீசார் 900 கிராம் எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திமிங்கல உமிழ்நீர் என்று அழைக்கப்படும் அம்பர்கிரிசை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் உடுப்பி மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ஜெயகரா (39), சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்த ஆதித்யா (25) மற்றும் ஹாவேரி மாவட்டம் சிகான் பகுதியை சேர்ந்த லோகித் குமார் என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து மங்களூர் மாநகர போலீசார் 900 கிராம் எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    ×