search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதமி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை கவுதமி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகை கவுதமி தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் மோசடி செய்து விற்று விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகிய இருவரையும் ஆஜராகுமாறு 6 முறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் நடிகை கவுதமியிடம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகியோருக்கு போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலால் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    • ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
    • மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பிரபல தமிழ் நடிகை கவுதமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியை சேர்ந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சால் சதீஷ்குமார், ஆர்த்தி, பாஸ்கரன் மற்றும் ரமேஷ் சங்கர் ஆகியோர் போல் ஆவணங்கள் தயாரித்து நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது மோசடி, மிரட்டல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு.
    • பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு. கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமி அளித்துள்ள கடிதம் மனவேதனை தருகிறது.

    அவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது பா.ஜனதாவுக்காக தேசிய அளவில் பணியாற்ற வாருங்கள். உங்களுக்கு பொறுப்பு வழங்குகிறோம் என்று அழைத்தேன். அப்போது கவுதமி பரவாயில்லை மாநில அளவில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவருடன் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். மாநில அளவிலான கட்சி நிகழ்ச்சிகளில் கவுதமி தீவிரமாக பங்கெடுத்து வந்தார்.

    எந்த நேரத்திலும் சோர்வு பாராமல் பணியாற்றக்கூடியவர். தைரியம்-தன்னம்பிக்கை மிகுந்த பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவுதமியின் உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உதவி கேட்டு இருந்தார்.

    அப்போது நான் அவரிடம் அந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் அனுப்பி வையுங்கள், நிச்சயமாக உதவி செய்கிறோம் என்று சொல்லி இருந்தேன்.

    இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது. நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ முற்படுவது இல்லை. கவுதமிக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என தெரியவில்லை.

    அதுபற்றி முழுமையாக தெரிந்தால்தான் நாங்கள் விளக்கம் சொல்ல முடியும்.

    பா.ஜனதா கட்சியில் நடிகை கவுதமி இருந்தது வரை அவர் கொடுத்த புகார் மீது ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும் அவரது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியென்றால் நடிகை கவுதமிக்கு ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

    நடிகர் விஜய்யின் லியோ படத்தை இன்னும் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போதுதான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை அரசியல், சினிமா ஆகிய இரண்டும் ஒன்றாக கலந்தது. திரைப்படங்களில் நல்ல கருத்துகள், பொழுதுபோக்கும் அம்சங்கள் இருந்தால் அது யார் நடித்த சினிமாவாக இருந்தாலும் பார்ப்பது தவறே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கவுதமி.
    • இவர் கடந்த 1990-ம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் நானும் எனது தாய் வசுந்தராதேவியும் கடந்த 1990-ம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். எனது தாய் 2000-ம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்த நிலத்தில் 8.16 ஏக்கர் நிலம் எனது பெயரில் இருந்தது.

    இந்நிலையில், வேளச்சேரியை சேர்ந்த அழகப்பன் மூலம் அண்ணாநகர் 6-வது அவென்யூவை சேர்ந்த தொழில் அதிபர் பலராமன் மற்றும் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த ரகுநாதன் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் நம்பிக்கையான நபர்கள் என்பதால் எனது பெயரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதனால் அந்த நிலத்தை கடந்த 2015-ம் ஆண்டு பலராமன், ரகுநாதன் ஆகியோருக்கு தனி பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்தேன். பிறகு இந்த இடத்தை தனியார் நிறுவனம் வாங்க விரும்புவதாக கூறினர்.

    மேலும், நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கையெழுத்து பெற்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ.11,17,38,907-க்கு விற்பனை செய்ததில் கேப்பிட்டல் கெய்ன்ஸ் டெக்ஸ் ரூ.2,61,25,637 வருமான வரி கட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு எனது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதை கண்டு நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

    இதுகுறித்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நிலம் விற்பனை தொகையில் 25 விழுக்காடு ரூ.2,61,25,637 கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நான் ரூ.65,31,500 கட்டியுள்ளேன். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    பின்னர் எனது சொத்தை விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்கு வார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போது தான், நிலத்தை விற்பனை செய்யபவர் ஏஜென்டாக இருந்த பலராமன், ரகுநாதன் ஆகியோர் கடந்த 6.1.2016-ம் ஆண்டு 8.16 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததன் மூலம் ரூ.11,17,38,907 பணம் பெற்றுள்ளனர். அதில் ரூ.4.10 கோடி மட்டும் பணத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.7,07,38,908 பணம் கொடுக்காமல் இருவரும் பரித்து கொண்டு ஏமாற்றி விட்டனர். எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.

    புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு-2 துணை கமிஷனர் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    நடிகை கவுதமி, ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றிவிட்டதாக ஏற்கனவே தொழில் அதிபர் அழகப்பன் மீது புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தார்.
    • மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கவுதமி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரான மகேஸ்வரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ரூ.25 கோடி மதிப்பிலான தனது நிலத்தை கட்டுமான அதிபரான அழகப்பன் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் நிலத்தை எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது சிகிச்சைக்காக விற்பனை செய்ய முடிவு செய்தேன். இதற்கு உதவி செய்வதாக கட்டுமான அதிபர் அழகப்பன் கூறியதை தொடர்ந்து அவருக்கு அதிகாரம் வழங்கினேன்.

    ஆனால் அவர் இடத்தை அபகரித்து வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று புகாரில் கூறியிருந்தார். இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அழகப்பன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது.

    ×