என் மலர்
நீங்கள் தேடியது "தவித்த சிறுமி"
- குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார்.
- போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார். அதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுமியிடம் விபரம் கேட்க, அந்த சிறுமி எதுவும் பேசவில்லை.
போலீஸ் நிலையம்
உடனே அந்த சிறுமியை போலீஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரித்தும் பலனில்லை. அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. உடனே போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.
ஒப்படைப்பு
இன்ஸ்பெக்டர் விசார ணையில், நாராயண நகரில் வசிக்கும் பெற்றோர் செந்தில்குமார், பிரித்தா என்பதும், 7 வயது சிறுமியின் பெயர் பிரித்திகா என்பது தெரியவந்தது. விளையாடப் போகும் விஷயம் சம்பந்தமாக தாயார் திட்டியதாக தெரி கிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார். இன்ஸ்பெக்டர் தவமணி எச்சரித்து, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.